சுட்ட குண்டு தொண்டையில் பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர், குரலில் ஏற்பட்ட சிறிய மாற்றம் தவிர வேறு எந்த சேதாரமுமின்றி குணமடைந்தார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் ஏன் நடந்தது? என்பது புரியாத பதிராகவே உள்ளது. இரண்டு கலை உலக நண்பர்களுக்கு நடுவில் துப்பாக்கி நுழைய காரணமாக இருந்த சம்பவம் எது?
அன்று நடந்த நிகழ்வு தொலைக்காட்சி தொடராக மக்கள் தொலைக்காட்சி வரும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஏற்கனவே ஆட்டோ சங்கர், சந்தனக்காடு என்ற இரண்டு உண்மையான சம்பவங்களை இதே நேரத்தில் ஒளி பரப்பி மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற மக்கள் தொலைக்காட்சி எம்.ஜி.ஆர் சுடப்பட்ட மறக்க முடியாத சம்பவத்தை மறக்க முட்யுமா என்ற தலைப்பில் ஒளிபரப்புகிறது.
எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா ஏன் சுட்டார்? எதனால் சுட்டார்? அவருக்கு ஏன் நடந்தது? விடை தெரியாத கேள்விகள். பதில் சொல்ல வருகிறது 'மறக்க முடியுமா'.
|