இரு மொழிகளில் மாதவன்
- 24.01.2008
By JBR
மாதவன் நடிக்கும் 'யாவரும் நலம்' தமிழ், இந்தி இரு மொழிகளில் தயாராவதால், ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் பேசி நடிக்கிறார் மாதவன்.
|
|
|
தமிழ், இந்தி இரு மொழிகளில் வெளியாகும் திரைப்படத்தில் மாதவன் நடிப்பது இது முதல் முறை. விக்ரம் கே.குமார் இயக்கும் இப்படத்தில் 'டிராபிக் சிக்னல்' முதலான இந்திப் படங்களில் நடித்த நீத்து சந்திரா மாதவன் மனைவியாக நடிக்கிறார்.
சிவில் இன்ஜினியரான மாதவன் அடுக்குமாடி குடியிருப்பின் 13 - வது தளத்தில் மனைவியுடன் வசிக்கிறார். அந்த குடியிருப்பில் மர்மமான விஷயம் ஒன்று நடக்கிறது. மாதவன் மட்டுமே அதை உணர்கிறார்.
விக்ரம் கே.குமாரின் இந்த த்ரில்லர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கதையை கேட்டவர் தானே ஒளிப்பதிவு செய்ய முன்வந்துள்ளார். இந்தியில் படத்துக்கு '13 - B Mein Sab khairiyat Hain' என பெயர் வைத்துள்ளனர். தமிழில் '13 -B இல் யாவரும் நலம்' என்று பெயர் வைத்தனர். தலைப்பில் வரும் B ஆங்கிலச் சொல் என்பதால், வரிவிலக்கு கிடைக்காது என 'யாவரும் நலம்' என இப்போது சுருக்கி வைத்துள்ளனர்.
|