குழந்தை பிறந்த பிறகு எக்ஸ்ட்ரா குஷியாகிவிட்டார் அல்டிமேட் ஸ்டார். பிப்ரவரிக்கு பிறகுதான் படப்பிடிப்புக்கு கிளம்புவேன் என்றிருந்தவர், ஜனவரியிலேயே ஹாங்காங் போய்விட்டார்.
ராஜூசுந்தரம் அஜித்தை வைத்து இயக்கும் படத்தின் சண்டைக் காட்சிகள் ஹாங்காங்கில் படமாக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர், வெளியூர் சண்டைக் கலைஞர்கள் இந்த சண்டைக் காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
படத்தில் அஜித்துக்கு யார் ஜோடி என்பது முடிவாகவில்லை. பிபாசா பாசுவின் கால்ஷீட்டை பெற தயாரிப்பாளர் தரப்பு முனைந்து வரும் தகவல் ஒன்றே கதாநாயகி குறித்து வெளிவந்திருக்கும் ஒரே தகவல்.
பிபாசா பாசுவுடன் கத்ரினா கைஃப்பின் பெயரும் நாயகிகள் லிஸ்டில் இடம் பெற்றுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
|