'மிருகம்' படத்துககுப் பிறகு ராஜ்கிரண் நடிப்பில் புதுப்படம் இயக்குகிறார் சாமி. ராமேஸ்வரம் படத்தை தயாரித்த ஐடிஐ பிலிம்ஸ் சாமியின் புதிய படத்தை தயாரிக்கிறது.
பத்மப்ரியா பளார் விவகாரத்தில் படம் இயக்க சாமிக்கு ஒருவருடம் தடைவிதித்தது தெரியும். தடையை தளர்த்தினால் படப்பிடிப்புக்கு கிளம்பலாம் என காத்திருக்கிறார் சாமி.
தனது புதிய படத்துக்கு 'ஆசான்', 'அய்யனார்' என இரு பெயர்களை தேர்வு செய்திருந்தார் சாமி. ஆசான் பெயரை 'எங்கள் ஆசான்' என வைத்து விஜயகாந்த் தரப்பு முந்திக் கொண்டது.
'அய்யனார்' டைட்டிலையும் ஏற்கனவே சேம்பரில் பதிவு செய்து வைத்திருந்திருக்கிறார். கிரீடம் பட இயக்குனர் விஜய். சாமி கேட்டும் அவர் டைட்டில் ஹம் தரவில்லை.
இதனால், தனது புதியபடத்துக்கு 'சரித்திரம்' என பெயர் வைத்திருக்கிறார் சாமி.
|