இந்தப் படத்தின் லொகேஷன் பார்க்க தென் மாவட்டங்களுக்குச் சென்று திரும்பியிருக்கிறார் ஹரி. 'சேவல்' ஆக்ஷ்ன் படம். பரத் இரண்டு மூன்று கெட்டப்புகளில் தோன்றுகிறார்.
பரத் ஜோடியாக நடிக்க 'எல்லாம் அவன் செயல்' பாமாவை கேட்டனர். கவர்ச்சிக்கு பாமா கட்டுப்பாடு விதித்ததால் அவரை கழற்றிவிட்டு, லண்டனைச் சேர்ந்த மாடல் ஒருவரை ஹரி தேர்வு செய்தார். அவரும் ஹரியின் ரசனைக்கு ஒத்துவரவில்லை.
கடைசியாக பூனம் பஜ்வாவை ஒப்பந்தம் செய்துள்ளார் ஹரி. தெலுங்கில் பிஸியாக இருக்கும் பூனம் தமிழில் ஜீவா ஜோடியாக 'தெனாவட்டு' படத்தில் நடித்து வருகிறார்.
'சேவல்' படத்தை விநியோகஸ்தர் ஜின்னா தயாரிக்கிறார். முதல் முறையாக ஹரி படத்துக்கு இசையமைக்கிறார் ஜி.வி. பிரகாஷ்குமார்.
|