கனெக்ட் பிலிம் மீடியா சார்பில் வாசு பாஸ்கர், மலேசியா சீமா மேகலை இணைந்து தயாரித்திருக்கும் படம் 'வேதா'. அருண் விஜய் நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடி, ஷீலா. தமிழக கவர்னர் பர்னாலாவின் பேரன் ஜெரோவதன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் வாசு பாஸ்கரே படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். காரணம், 'வேதா' கதை வாசு பாஸ்கரின் நண்பரின் உண்மைக் கதை. சிங்கப்பூரைச் சேர்ந்த அந்த நண்பரை படம் வெளியான பிறகு மீடியாவுக்கு அறிமுகப்படுத்தும் திட்டமும் வாசு பாஸ்கருக்கு இருக்கிறது.
தம்பிக்காக தனது மனைவியை அண்ணன் தாரைவார்க்கும் கதையிது என 'வேதா' குறித்து வில்லங்கமான செய்தி ஒன்று உலவுகிறது. இதற்கு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக்குழு.
படத்தை வாசு பாஸ்கரே சொந்தமாக வெளியிடுகிறார்.
|