Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

காதல் விவகாரத்தில் சிக்கிய மணிவண்ணன் மகன்
- 24.04.2008

By Amalan
'அமைதிப்படை'யை இயக்கிய மணிவண்ணனின் மகன் பெண் இயக்குனர் ஒருவருக்கு 'அல்வா' கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Raghuvannan, stephy

'மாறன்' படத்தில் சத்யராஜின் மகனாக நடித்தவர் ரகுவண்ணன். இயக்குனர் மணிவண்ணனின் இளைய மகனான இவர் 'தொடக்கம்' என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது 'தமிழ்தேசம்' படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார்.

"தன்னை காதல் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக" ரகுவண்ணன் மீது சரமாரி புகார்களை போலீஸில் அள்ளி வீசியுள்ளார் ஸ்டெபி என்பவர். இவர் 'நேபாளி' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

ஸ்டெபி கூறும் குற்றச்சாட்டு இதுதான்...

"எனக்கும், ரகுவண்ணனுக்கும் இன்டர் நெட் சாட்டிங் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நேரில் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். எங்கள் காதலுக்கு ரகுவண்ணனின் பெற்றோர் முதலில் ஆதரவு தெரிவித்தனர். இதனால் இருவரும் நெருங்கிப்பழகினோம், போட்டோக்களும் எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு மணிவண்ணன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Raghuvannan, stephy

பெற்றோர் எதிர்பார்ப்பையும் மீறி ரகுவண்ணன் என்னை ரகசிய திருமணம் செய்தார். பெற்றோருக்கு பயந்து நாங்கள் எடுத்துக் கொண்ட போட்டோக்களை என்னிடம் கொடுத்துவைத்து இருந்தார். இப்போது என்னை ஏற்க மறுத்து சேர்ந்து வாழ மறுக்கிறார். மணிவண்ணன் குடும்பத்தினர் என்னை மிரட்டுகிறார்கள். என் மீது மகளிர் ஆணையத்தில் பொய்க்குற்றச்சாட்டுகள் கூறி பிரிக்க முயற்சிக்கின்றனர்" என்ற ஸ்டெபி, ரகுவண்ணனுடன் நெருங்கி இருப்பதுபோன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு திடுக்கிட வைத்துள்ளார்.

குற்றம் நடந்தது என்ன? என்கிற அளவில் ரகுவண்ணனிடம் விசாரித்தால், "ஸ்டெபியுடன் நட்பாக மட்டுமே பழகினேன். தப்பாக பழகவில்லை. எங்கள் குடும்பத்தை மிரட்டி பணம் பறிப்பதற்காகவே வீண்பழி சுமத்துகிறார்" என மறுக்கிறார்.

உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்துதானே ஆகனும்!







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us