பொள்ளாச்சியில் எங்கள் ஆசான்
- 24.04.2008
By Amalan
கட்சிப்பணி, ரசிகர்மன்றம், சட்டமன்றத்திற்கான நேரம், சினிமா படப்பிடிப்பு என காலில் சக்கரம் கட்டாத குறையாக ரவுண்ட் அடித்துவருகிறார் விஜயகாந்த்.
|
|
|
கட்சிக்கார்ரகளுக்கும், ரசிகர்களுக்கும் விஜயகாந்த் கொடுக்கப்போகும் அடுத்த விருந்து 'அரசாங்கம்'. இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து கேப்டன் நடிக்கப்போகும் படம் 'எங்கள் ஆசான்'.
விஜயகாந்தின் 151-வது படமான இதனை தயாரிப்பவர் யுவஸ்ரீ பிக்சர்ஸ் தங்கராஜ். இவர் 'சுந்தரா டிராவல்ஸ்', 'மீசை மாதவன்' படங்களை தயாரித்தவர். இப்படத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பூஜை போடப்பட்டாலும், கடந்த 21-ந் தேதியிலிருந்துதான் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
பொள்ளாச்சியில் தொடங்கியுள்ள 'எங்கள் ஆசான்' படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையம், உடுமலைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒருமாதம் தொடர்ந்து நடத்தப்படவுள்ளது.
'அரசாங்கம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் செரில் பிரிண்டோவே 'எங்கள் ஆசானி'ல் விஜயகாந்துடன் ஜோடி சேர்கிறார். வில்லனாக புதுமுகம் நடிக்கிறார்.
'தைப்பொறந்தாச்சு', 'சூப்பர் குடும்பம்' படங்களை இயக்கிய கலைமணி கதை, திரைக்கதை எழுதி இயக்க, வசனத்தை வேலுமணி எழுதியுள்ளார். சபேஷ்முரளியின் இசையில் முத்துலிங்கம், பா.விஜய், சினேகன் பாடல்களை எழுதியுள்ளனர்.
|