குசேலனில் சினிமா நடிகராகவே ரஜினி நடிப்பதால் சினிமா சம்பந்தப்பட்ட பாடல் ஒன்று படத்தில் இடம் பெறுகிறது. ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையமைப்பில் வாலி அந்த பாடலை எழுதியுள்ளார்.
'சினிமா...சினிமா...சினிமாதான்... எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், சிவாஜி ராஜ்குமார் வந்ததும் இந்த சினிமாதான்'...
என்னும் அந்தப்பாடல்காட்சி ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நேற்று படமானது.
மும்பை மாடல் அழகிகளுடன் ரஜினி ஆடிப்பாடும் இந்த பாடல்காட்சிக்கு பிருந்தா நடனம் அமைக்கிறார். ரஜினி குதிரை சவாரி செய்யும் இந்த பாடலில் குதிரையுடன் அவர் பறப்பது போன்று கிராபிக்ஸ் வடிவமைக்கப்படுகிறது.
ரஜினி குதிரையில் வரும் காட்சிக்காக படப்பிடிப்பு நடந்த அரங்கத்தில் 200 லாரி மணல் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டதாம். நேற்று நடந்த படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொள்ளவில்லை.
இந்தபாடல் காட்சி முடிந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பு உடுமலைப்பேட்டை மலையடிவாரத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெளியிடம் என்பதால் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த தனியார் செக்யூரிட்டி நிறுவனம் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
|