நாளைய தினம் பாடல்வெளியீட்டு விழா நடக்கிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5 மணிக்கு விழா ஆரம்பமாகிறது. 4.30 மணிக்குள் இருக்கையில் அமரவேண்டுமென முன்கூட்டியே நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது.
பாடல்களுக்கு இசையமைத்துள்ளவர் ஹிமேஸ் ரேஸ்மியா. வாலி, வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளனர். 'காளை மட்டும் பார்த்தால் கடவுள் தெரியுதா...' என்ற பாடல்தான் கேசட்டில் இருக்கும் முதல் பாடலாம். இந்த பாடலை ஹரிஹரன் பாடியுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி, ஜாக்கிசான், அமிதாப்பச்சன் உள்ளிட்ட இந்திய திரையுலக நட்சத்திரங்கள் ஆகியோர் விழாவிற்கு வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் தனியார் செக்யூரிட்டிகள் போடப்பட்டுள்ளது. போக்குவரத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
ஜாக்கிசானுக்கு பாதுகாப்பு தரக்கோரி, ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் மேனேஜர் சுரேஷ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளார்.
இன்று இரவு சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வரும் ஜாக்கிசான், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ்கோரமண்டல் ஹோட்டலில் தங்குகிறார். ஹோட்டலில் அவர் சாப்பிடும் உணவு, திரவ ஆகாரம் உள்ளிட்ட அனைத்தும் பரிசோதனைக்கு பிறகே அவருக்கு கொடுக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழா முடிந்ததும் நாளை இரவே ஜாக்கிசான் ஹாங்காங் திரும்புகிறார்.
|