Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
கசந்தது இல்லறம்; கணவரைப் பிரியும் காவ்யா
- 24.07.2009
By Amalan
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அட்சதை தூவி தொடங்கப்பட்ட காவ்யா மாதவனின் இல்லற வாழ்க்கையில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. எண்ணி 150 நாட்களில் கணவனை விவாகரத்து செய்கிறார்.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக விளங்கிய காவ்யா மாதவன், 'காசி', 'என் மன வானிலே', 'சாது மிரண்டா' போன்ற தமிழ் படங்களில் நடித்தும் வரவேற்பை பெற்றார். கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கும் குவைத் வங்கி அதிகாரியான நிஷால் சந்திரனுக்கும் திருமணம் நடந்தது.
இல்லற வாழ்ககையை இனிதே துவங்கும் ஆசையில் குவைத் சென்றவர், போன வேகத்தில் திரும்பி வந்தார். தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் பேட்டிக் கொடுத்தார். இந்த பேட்டியின் பின்னணியில் புகுந்த வீட்டில் காவ்யா, கசப்பான அனுபவங்களை சந்தித்ததாக சொல்லப்பட்டது. அது உண்மைதான் என்பது இப்போது வெளிச்ச்ததிற்கு வந்துள்ளது.
கேரளாவில் தனது குடும்ப வக்கீலை சந்தித்து விவாகரத்து ஏற்பாடுகளை செய்யுமாறு கூறியுள்ளாராம் காவ்யா. கணவருக்கும் தனக்குமிடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும், மாமியார் உட்பட மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் வக்கீலிடம் புகார் கொடுத்துள்ளார் காவ்யா.
'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை...'
|