Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
விஜயகாந்த் இயக்கத்தில் விருதகிரி
- 24.11.2009
By Amalan
விஜயகாந்தின் கையில் இனி மைக் மட்டுமல்ல காமிராவும் இருக்கும். இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.
கேப்டன் சினி கிரியேஷ்ன்ஸ் சார்பில் எல்.கே.சுதிஸ் தயாரிக்கும் ‘விருதகிரி’ படத்தில்தான் இயக்குனர் நாற்காலியில் அமர்கிறாராம். கதாநாயகனும் அவரே. நேற்று முதல் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்.
பட விழாவிற்கு தொண்டர்களையெல்லாம் அழைத்து கூட்டம் போடாமல் ரொம்ப சிம்பிளாக பூஜையை நடத்தியுள்ளார் விஜயகாந்த். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேகா ஹவுஸில் சில காட்சிகளை படமாக்கினார் விஜயகாந்த்.
படத்திற்கு எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்ய, சுந்தர்.சி.பாபு இசையமைக்கிறாராம். கதாநாயகி யாரென்பது இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. கேப்டன் படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்காது என்ற சந்தேகத்தில் முன்னனி நடிகைகள் சிலர் ஒதுங்கிக்கொள்ள, மூன்றாம்தரமான நாயகிகளுக்கு வலைவீசியுள்ளாராம்.
|