---Artistgallery2---
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த ஆச்சி மனோரமா இதில் முதல் முறையாக அரவாணி வேடத்தில் நடிக்கிறார். இவருடன் கோவை சரளா, சரண்யா புஷ்பவனம் குப்புசாமி, அபிஷேக், மயில் சாமி, மதன்பாப், மாறன், ராம், நாக பூஷணம், திண்டிவனம் சுப்பிரமணியன், கிண்ணக்கொறை ராஜ், இவர்களுடன் நாயகனாக புதுமுகமும் சஞ்சய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த கதைக்கு பொருத்தமான மூன்று கதாநாயகிகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மனலச்சாரல் படத்தில் ஒளிப்பதிவாளராக தங்கர்பச்சானை அறிமுகம் செய்து காதலே நிம்மதியில் கை கோர்த்த இந்திரன் இந்த படத்தில் தங்கர்பச்சானின் உதவியாளர் K.C. ராஜீஸ் என்பவரை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளர். இசையமைப்பாளர் தேவாவின் சிஷ்யனும் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வரா இசை கல்லூரி மாணவருமான M.M. விஜய்குமார் என்பவர் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
கதை திரைக்கதை வசனத்துடன் பாடல்களையும் எழுதி இயக்குகிறார் இந்திரன்.
நீலகிரி மண்ணில் பிறந்து, வளர்ந்து பின் அங்கிருந்து வெளியே வந்து கல்லூரியில் படித்து சாப்ட்வேர் இன்ஜினியராகி தனது 34 - வது வயதில் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட நீலகிரியை சேர்ந்த ஒரு இளைஞனின் கதைதான் இந்த 'ஜான்'.
பாடல் காட்சிகள் லண்டன், கனடா போன்ற நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டத்தில் முடித்து ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் தொடக்கவிழா கடந்த 16-ந் தேதி A.V.M. ஸ்டுடியோவில் நடைபெற்றது. நீலகிரியிலிருந்து நூற்றுக்கணக்கான படுகர் இன மக்களை வரவழைத்து அவர்களின் வழக்கப்படி நடனமாடி, ஒன்பது அரவாணிகள் அகல் விளக்கு ஏந்தி மலர் தூவி மனோரமாவை வரவேற்ற விதம் புதுமையாகவும் கண்கொள்ளாக்காட்சியாகவும் இருந்தது.
படத்தை தயாரிக்கும் S.N.S மீடியா ஹொச முங்காரு என்ற படத்தையும் தயாரித்துள்ளது.
|