---Artistgallery2---
உண்மையா சீயான்? என விக்ரமிடம் கேட்டால் உண்மையில்லை என நறநறக்கிறார். 'கந்தசாமியில்' பல வேடங்களில் நடிப்பது உண்மைதான். எந்தெந்த வேடங்களில் நடிக்கிறேன் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனால், இத்தாலியிலிருந்து வரும் தீவிரவாதி போன்ற கேரக்டரில் நான் நடிப்பதாக வந்த செய்தி தவறானது.
"அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் போராளியாக நடிக்கிறேன்.எனினும் அந்நியன் கதைக்கும் இதற்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. குழந்தைகளை கவரும் வகையிலான காட்சிகளும் படத்தில் இடம்பெறுகிறது" என்றவரின் கோபம் சற்று தணிந்தபோது அடுத்த கேள்வியை போட்டோம்.
உங்க படம் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதே?
"நிஜம்தான். 'மஜா'வுக்கு பிறகு நான் ஒப்புக்கொண்ட 'பீமா' வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். இந்த தாமதத்தை சரி செய்யும் வகையில் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளேன். 'பீமா' ரிலீசை தொடர்ந்து 'கந்தசாமி' வெளிவரும்" என்றார் சீயான்.
|