முன்பெல்லாம் பொங்கல், தீபாவளியன்று பத்து படங்களுக்கு குறையாமல் வெளிவந்துகொண்டிருந்தன. அவற்றில் குறைந்தது இரண்டு படங்களாவது சூப்பர்ஹிட் ஆவதுண்டு. அரைடஜன் படங்கள் கணிசமான வசூலை குவித்துவிடும். இந்த ஆரோக்கியமான போக்கெல்லாம் கடந்த சில வருடங்களாக தலைகீழாக மாறிவிட்டது.
பொங்கல் ரிலீஸ், திபாவளி ரிலீஸ் என்று விளம்பரம் செய்யப்படும் படங்களெல்லாம் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து பின்வாங்கி பயந்து ஒதுங்குகின்றது.
தைரியமாக காலரை தூக்கிவிட்டபடி களத்தில் குதிக்கும் எஞ்சிய படங்களும் போட்ட முதலுக்கே மோசம் ஏற்படும் அளவில் மண்ணை கவ்விக் கொள்ளும் நிலைதான் இப்போது பெரும்பாலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்தபொங்கலுக்கு 'பீமா', 'பழனி', 'காளை', 'பிடிச்சிருக்கு', 'பிரிவோம் சந்திப்போம்', 'வாழ்த்துகள்' ஆகிய படங்கள் வெளிவந்து 'ஓடிக்கொண்டிருக்கிறது'. இந்த ஆறு படங்களின் வசூலும் திருப்திகரமாக இல்லை என்று விநியோக துறையில் நீண்ட அனுபவம் உள்ள ஒருவர் கூறுகிறார்.
இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திகொண்டு வடிவேலு நடித்த 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்', பிரசன்னா நடித்த சாதுமிரண்டா ஆகிய படங்களை வெளியிடப்படவுள்ளது.
இந்த படங்கள் வெளிவந்துவிட்டால் தற்போது கிடைத்துவரும் சொற்ப வசூலும் பாதிக்கப்படுவிடக்கூடும் என பயந்து கொண்டிருக்கின்றனர் பொங்கல் பட தயாரிப்பாளர்கள்.
ஆக 'பீமா' போன்ற பலசாலிக்கே வடிவேலு படம் சிம்ம சொப்பணமாக விளங்குவது உறுதி என கூறுகின்றனர் திரைப்பட வியாபார நுனுக்கம் தெரிந்த சிலர்.
|