மலையாளபடத்தில் ரீமேக் என்றால் ரஜினிக்காக அந்த கதையில் பல மாற்றங்களை செய்யவுள்ளார் இயக்குனர் பி.வாசு. கதாநாயகிகள் மற்ற நடிகர். நடிகைகள் தேர்வு நடந்துவரும் நிலையில் இமயமலைக்கு சென்று தியானத்தில் ஆழ்ந்துள்ளார் ரஜினி.
பிப்ரவரி இரண்டாவது வாரமே ரஜினி சென்னை திரும்புகிறார். அவர் வந்த பிறகு பிப்ரவரி 15-ந் தேதி படப்பிடிப் தொடங்கப்படவுள்ளது.
இதற்கிடையே 'கதபறயும் போல்' படத்தில் ரஜினி நடிக்கவுள்ள கேரக்டரில் நடித்துள்ள மம்முட்டியிடம் இதுபற்றி கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது :-
"வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சினிமா நடிகனாக உயரும் கேரக்டரில் நான் நடித்திருந்தேன். இந்த கேரக்டரில் இப்போது ரஜினி நடிப்பது எனக்கு சந்தோஷமே. ஏனென்றால் என்னைவிட அந்த கேரக்டருக்கு பொருத்தமானவர் ரஜினிதான்.
நான் பணக்கார குடும்பத்தில் பிறந்து வக்கீலாக இருந்து நிறைய சம்பாதித்து அதன்பிறகு நடிகனாக வந்தேன். ஆனால் ரஜினி அப்படியல்ல. பஸ் கன்டக்டராக இருந்து கஷ்டப்பட்டு படிபடியாக முன்னேறியவர். எனவே ரஜினி சாருக்குதான் அந்த கதாபாத்திரம் பொருந்தும்" என புகழ்ந்தார்.
|