கமல் பத்து வேடங்களில் நடித்திருக்கும் தசாவதாரத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்க இருக்கிறது. கமலின் பத்து வேடங்களில் ஒன்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். இவரிடம் விஞ்ஞானியாக வரும் கமல் பாராட்டு பெறுவதாக காட்சி இடம் பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.
இதையொட்டி வரும் காட்சியில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி தோன்றுகவதாகவும் தசாவதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில படங்களில் நடித்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும் முக்கிய காட்சியொன்றில் நடித்துள்ளார். மேடைப்பேச்சு பாணியில் இந்தக் காட்சி எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
திருமாவளவனின் பேச்சில் ஜனங்கள் உணர்ச்சிவசப்பட்டு போராட்டத்தில் குதிப்பது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் இன்னும் முடிவடையாததால், படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
|