கமல் கடவுளை தூஷனை செய்திருக்கிறார் என படம் வெளியாகும் முன்பு ஆன்மீகவாதிகள் கோர்ட்வரை சென்று படத்துக்குதடை கோரினர். படம் வெளியான பிறகு விமர்சகர்களின் பேனா முனை குத்தல்கள். தலித்களை கேவலப்படுத்தியிருக்கிறார்....இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார்...
இந்த எதிர்ப்புகளை தாண்டி உலக ஓட்டம் ஓடுகிறது தசாவதாரம். சென்னையில் மட்டும் 38 நாட்களில் 8.55 கோடிகள் வசூலித்துள்ளது படம்.
நிற்க. நாடார் அமைப்புகளின் குற்றச்சாட்டுக்கு வருவோம். படத்தில் வரும் தலித் தலைவர் வின்சென்ட் பூவராகன் கதாபாத்திரத்துக்கும் மணல் கொள்ளைக்கு காரணமான வாசு கேரக்டருக்கும் நீண்ட வாக்குவாதம் ஒன்று நடக்கிறது. இதில் பூவராகவன் நாடார்களை குறிக்கும் மோசமான வார்த்தையால் வாசுவை திட்டுவதாக நாடார் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. நாடார்களை மணற்கொள்ளையர்களாக சித்தரித்திருப்பதற்கும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
கண்டன போஸ்டர்களுடன் நாடார் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது. போராட்டம் ஜெயிக்குமா இல்லை நமத்துப் போகுமா? என்பது போகப்போக தெரியும்!
|