1800 பிரிண்டுகள் - ஐஸ்வர்யாராய் படம் சாதனை!
- 25.11.2006
By JBR
ஹாலிவுட்டுக்கு அடுத்தபடியான வர்த்தகத்தை எட்டும் முனைப்புடன் இருக்கிறது இந்தி சினிமா. இருநூறு பிரிண்டுகளுக்கே தமிழ்சினிமா விழி பிதுங்கும்போது, சாதாரணமாக ஆயிரம் பிரிண்டுகள் இந்திப் படத்திற்கு போடப்படுகின்றன.
|
|
|
அபிஷேக்பச்சன் ஹீரோவாகவும், ஜான் ஆபிரஹாம் வில்லனாகவும் நடித்த 'தூம்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. சாதாரணமான போலீஸ் திருடன் கதை என்றாலும் ஸ்டைலிஷான இயக்கம் படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக்கியது.
சஞ்சய் காத்வி இயக்கத்தில் இப்போது 'தூம் - 2' ரிலீஸாகியிருக்கிறது. அபிஷேக், ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யாராய், பிபாஷா பாசு நடித்துள்ளனர். முதல் பாகத்தின் வெற்றி மற்றும் ஐஸின் தாராள கவர்ச்சி ஆகியவற்றால் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது 'தூம் - 2.'
மொத்தம் 1,800 பிரிண்டுகள் இந்தப் படத்திற்கு போடப்பட்டுள்ளன. ஷாருக்கானின் 'டான்' படத்துக்கு 1,600 பிரிண்டு போடப்பட்டதே இதுவரை இந்திய சாதனையாக இருந்தது. அதனை சஞ்சய் காத்வியின் படம் முறியடித்திருக்கிறது.
சரி, இவ்வளவு பிரிண்டுகள் போட்டிருக்கிறார்கள். அதற்கேற்ப கல்லா கட்டுமா படம்?
கவலையே வேண்டாம். இந்தியா முழுவதும் ரிசர்வேஷன்லேயே பதினைந்து கோடி வசூல் செய்திருக்கிறது படம். ஆடியோ, வெளிநாட்டு உரிமை, சேட்டிலைட், செல்போன் போன்றவை சேர்க்காமலே, பட ரிலீஸுக்கு முன் வசூல் செய்த கலெக்ஷ்ன் இது. படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் 35 கோடிகள் மட்டுமே!
|