ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிலிம்பேர் விருது!
- 26.02.2007
By JBR
தேசிய விருதுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் மதிக்கப்படும் சினிமா விருது, ஆங்கிலப் பத்திரிகையான பிலம்பேர் அளிப்பது. வருடாவருடம் இந்திப் படங்களுக்கும் பாலிவுட் கலைஞர்களுக்கும் விருது வழங்குகிறவர்கள் சில வருடங்களாக தென் மாநில மொழிப் படங்களுக்கும் விருதுகள் வழங்குகிறார்கள். இவ்விரு நிகழ்ச்சிகளும் தனித்தனியே நடத்தப்படும்.
|
|
|
நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தி படங்களுக்கான விருது வழங்கும் விழாவில் சில சுவாரஸியங்கள். சென்ற வருடத்தின் சிறந்த துணை நடிகருக்கான விருது அபிஷேக்பச்சனுக்கு அளிக்கப்பட்டது. இவ்விருதினை அவரது வருங்கால மனைவி ஐஸ்வர்யா ராய் அளித்தார்.
இதேபோல் வாழ்நாள் சாதனையாளர் விருது ஜெயபச்சனுக்கு வழங்கினர். இவ்விருதை அவரது கணவர் அமிதாபச்சன் வழங்கியபோது அரங்கில் கைதட்டல் அள்ளியது.
சிறந்த நடிகருக்கான விருது 'தூம்: 2' படத்தில் நடித்த ஹிருத்திக்ரோஷனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது 'ஃபனா' படத்தில் நடித்த கஜோலுக்கும் வழங்கப்பட்டன. 'ரங் தே பசந்தி' யின் இயக்குனர் ராஜேஷ் மெஹ்ரா சிறந்த இயக்குனராக தேர்வு செய்யபட்டார்.
சென்ற வருடம் பாலிவுட்டை கலக்கிய 'ரங் தே பசந்தி' யின் பாடல்களுக்காக அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது.
|