இதில் மாற்றம். ஏப்ரல் மாதம் 2- ம் தேதிக்கு திடீரென்று இசை வெளியீட்டு விழாவை மாற்றி வைத்திருக்கிறார்கள்.
ஏப்ரல் மாதம் IPL டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன. அதனால், ஏப்ரல் மாதம் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர். 'தசாவதாரம்' படத்தின் வெளியீடும் தள்ளிப் போகுமா என்றொரு ஐயம் எழுந்தது.
அதை நிருபிப்பதுபோல், மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த இசை வெளியீட்டு விழாவை ஏப்-2-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். இதனால் திட்டமிட்டபடி, ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் படம் வெளியாகுமா என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஏப்- 2 நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற இருக்கும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஜாக்கிசானுடன் பாலிவுட் மற்றும் மலையாளம், தெலுங்கு மொழிகளின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள். ஹாலிவுட் படவிழாக்களில் அமைக்கப்படும் அரங்கு போன்று பிரமாணடமான அரங்கை இவ்விழாவுக்காக அமைக்க இருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
மேடை அரங்குக்கு மட்டும் எண்பது லட்சம் செலவிட இருக்கிறார்கள்!
|