இளையராஜா இசையில் வாசன்கார்த்திக் நடிக்கும் 'அய்யன்'
- 26.04.2008
By Amalan
வர்ஷா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எஸ்.எல்.எஸ். தயாரிக்கும் மிக பிரமாண்டமான படம் 'அய்யன்'.
|
|
|
"எவன் ஒருவன் அநீதியை கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போகிறானோ அவனெல்லாம் என் தோழன்"
என்ற சேகுவேராவின் உணர்வே இந்த படத்தின் கதையின் கரு. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கேந்திரன்முனியசாமி. இவர் 'தினந்தோறும்' நாகராஜ், பார்கவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர். இவர் இயக்கும் முதல் படம் இது.
'மாமதுரை' படத்தில் கதாநாயகனாக நடித்த வாசன் கார்த்திக் இப்படத்தில் மாறுபட்ட மிரளச்செய்யும் முனியசாமி என்கிற வீரம் மிகுந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவரோடு 'பிதாமகன்' மகாதேவன், சண்முகராஜன், செவ்வாழை ராசா, 'ஒன்பது ரூபாய் நோட்டு' நிதிஷ் பாண்டியன், 'கல்லூரி' பரணி, சிங்கமுத்து, அல்வா வாசு, சூப்பர் குட் லட்சுமணன், முத்துக்காளை, சுப்புராஜ், சவுந்தர்,நெல்லை சிவா, விஜயகணேஷ், ஸ்ரீபவன், சிறுவன் சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்த மண்ணின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த உன்னத மனிதர்களின் ஆத்மாவாக, அரியசெல்வி என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக ஒருவர் அறிமுகமாகிறார். அதற்கான தேர்வு நடந்து வருகிறது.
கிராமத்து கதையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - காசி வி.நாதன், கலை-என்.கே.பாலா, படத்தொகுப்பு-பி.சாய்சுரேஷ், நடனம்-தினா, சண்டைப்பயிற்சி-சூப்பர்சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை- கே.ஆர்.பாலமுருகன்.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முதுகுளத்தூரில் தொடங்கி, தொடர்ந்து ஒரேகட்ட படபிடிப்பாக நடைபெறவுள்ளது.
கிராமத்து அழகையும், அதில் கண்ணுக்குத் தெரியாத வறுமையையும் அந்த உலகிற்கு எடுத்துச்சொல்லப்போகிறவன் இந்த அய்யன். இதுவொரு மிரட்டலான ஆக்ஷ்ன் படம் ஆகும்.
|