Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

அமிதாப் - கமலுடன் இணைந்து நடிப்பேன் : ஜாக்கிசான்
- 26.04.2008

By Amalan
அமிதாப்பச்சன், கமலுடன் இணைந்து நடிக்க விரும்புவதாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் தெரிவித்துள்ளார்.

K.S.Ravikumar, Jackie Chan

தசாவதாரம் விழாவில் அவர் கூறியதாவது :-

இந்த விழாவில் நான் கலந்து கொள்வதற்கு, தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தான் காரணம். அவரை எனக்கு 25 வருடங்களாக தெரியும். அவர்தான் இந்த விழாவுக்கு என்னை அழைத்தார்.

நான் நடித்த பல படங்களை அவர் இந்தியாவில் வெளியிட்டு இருக்கிறார். தொடர்ந்து என் படங்களை அவர் இந்தியாவில் வெளியிட வேண்டும். அப்படி செய்தால்தான் நான் அடிக்கடி சென்னை வர முடியும். மீண்டும் மீண்டும் நான் சென்னைக்கு வருவேன்.

முதல்அமைச்சர் கருணாநிதி பற்றி நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். சினிமாவுக்கு அவர் நிறைய சேவை செய்து இருக்கிறார். பல நன்மைகளை செய்து இருக்கிறார்.

அமிதாப்பச்சனை எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் ஸ்டார். 'தசாவதாரம்' பட காட்சிகளை பத்து நிமிடங்கள் பார்த்தேன். வாவ்...வாவ்...வாவ்...

அமிதாப்பச்சன், கமலஹாசன் ஆகியோருடன் நான் இணைந்து பணிபுரிய ஆசைப்படுகிறேன். நானும் ஒரு நடிகர்தான். எனக்கும் நடிக்க தெரியும். சண்டை போடத்தெரியும். டைம் இருந்தால், கூப்பிடுங்கள். நாம் சேர்ந்து படம் பண்ணலாம். ஆக்ஷ்ன் காட்சிகளில் நீங்கள் இருவரும் நடியுங்கள். காதல் காட்சிகளை மட்டும் எனக்கு கொடுத்து விடுங்கள்" என்றபடி அருகில் இருந்த மல்லிகாவை கட்டிப்பிடிக்க, ஜாக்கிசானின் குறும்பில் அரங்கமே அதிர்ந்தது.

K.S.Ravikumar, Jackie Chan, Mallika Sherawat, Asin

அமிதாப்பச்சன் பேசியதாவது :-

"எனக்கு முதல் விருது சென்னையில்தான் கிடைத்தது. 'சவுத் ஹிந்துஸ்தானி' என்ற படத்துக்காக, கலைஞர் கருணாநிதி கையினால் அந்த விருதை பெற்றேன். அதனால் எனக்கு சென்னையை மிகவும் பிடிக்கும்.

நான் ஒவ்வொரு முறை சென்னைவரும்போதும், கமலஹாசனை சந்திப்பேன். அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒன்றரை படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறோம். அதில், ஒரு படம் திரைக்கு வந்தது. இன்னொரு அரை படம் வெளிவரவில்லை.

கமலஹாசன், திறமையான நடிகர் நட்டுமல்ல, தனித்துவமானவர். 'தசாவதாரம்' படத்தில் அவர் நடித்த காட்சிகளைப் பார்த்து, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொறாமையாக இருந்தது. எங்களால் செய்ய முடியாததை கமலஹாசன் செய்து கொண்டிருக்கிறார்". இவ்வாறு அமிதாப்பச்சன் பேசினார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us