கலைஞரின் உரையிலிருந்து :-
"சில நாட்களுக்குமுன் கமல் என் வீட்டிற்கு வந்து தசாவதார புகைப்படங்களை காட்டினார். 10 வித வேடங்களில் அவர் போட்டிருந்த ஒப்பனையை பார்த்து ஆச்சரியப்பட்டேன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 20 நிமிடம் ஓடக்கூடிய படக்காட்சிகளையும் பார்த்தேன். அதைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். பிரமாண்டம் என்பதற்கு உதாரணமாக 'தசாவதாரம்' இருக்கிறது.
படக்காட்சிகளை பார்த்துவிட்டு என்னையும் அறியாமல் கமலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன். இதுவரை கலைஞானியாக இருந்த கமல் உலகமகா கலைஞானியாக தென்படுகிறார்.
ஜாக்கிசானுக்கும் கமலுக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை உண்டு. ஜாக்கிசான் பிறந்தது 07/04/1954-ல். கமல்ஹாசன் பிறந்தது 07/11/1954-ல். கமலைவிட ஜாக்கிசான் 7 மாதங்களே மூத்தவர். கமல் 6 வயதில் நடிக்க வந்தார். ஜாக்கிசான் 8-வது வயதில் நடிக்கவந்தார். ஜாக்கிசான் இதுவரை 100 படங்களில் நடித்துள்ளார். கமல் 240 படங்களில் நடித்துள்ளார்.
ஜாக்கிசான் தனது ரசிகர்களுக்கு ஒரு செய்தியை சொல்வதாக ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன். "உங்களுடைய பெற்றோரை உயிரோடு இருக்கும்போதே வணங்கி விடுங்கள். இறந்த பிறகு அவர்களுடைய கல்லரைக்கு சென்று வணங்குவதைவிட இது சிறந்தது" என்று சொன்னவர் ஜாக்கிசான்.
நம்முடைய கலைஞானி கமலுடைய கிரீடத்தில் முத்து பதிக்கப்பட்டதுபோன்றது இந்த விழா" என விடைபெற்றார்.
ஜாக்கிசான் பற்றி புகழ்ந்தபோது அதனை ஜாக்கிசானுக்கு K.S.ரவிக்குமார் விளக்கிக்கூறினார்.
முன்னதாக பாடல் கேசட்டை கலைஞர் வெளியிட ஜாக்கிசான் பெற்றுக்கொண்டார்.
|