|
|
|
|
|
Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
அமீருக்கு கிடைக்குமா 50 ஆயிரம் டாலர்?
- 26.11.2009
By Amalan
‘யோகி’யை நாளை பார்க்கப்போகும் ஆவலில் ரசிகர்கள் காத்திருக்க, இன்னொரு பக்கம் வெளியிடக்கூடாது என வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில் வருமா, வராதா என பல்ஸை எகிற வைத்துள்ளது படம்.
இந்த பரபரப்புகளுக்கிடையே இன்னொரு சக்கரை செய்தியையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் அமீர். யெஸ்.துபாயில் நடக்கவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது’யோகி’.
ஆசிய - ஆப்ரிக்க பிரிவில் யோகி மோதுகிறது. இந்தப் பிரிவில் 25 திரைப்படங்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள நடுவர் குழு விருதுக்கான படங்களைத் தேர்வு செய்யும். டாக்குமெண்டரி மற்றும் குறும்படங்களுக்கும் தனித்தனி போட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. திரைப்படப் பிரிவில் வெற்றிபெறும் படத்துக்கு முதல் பரிசு 50 ஆயிரம் டாலர்கள் வழங்கப்படும். நடுவர் சிறப்பு விருது பெறும் படத்துக்கு 40 ஆயிரம் டாலர் கிடைக்கும்.
|
|
|