---Artistgallery2---
'சென்னை 28' படத்தில் நடித்த நிதின் சத்யா, பிரேம்ஜி, சாய்ராஜ், நடித்து வரும் படம் 'தோழா'. அரோவணா பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சாகித்யா என்ற புதுமுகம் நடித்துவருகிறார்.
நிதின் சத்யா - சாகித்யா பங்குபெறும் ஒரு பாடல்காட்சி பொள்ளாட்சியில் படமாக்கப்பட்டு வந்தது. 40 அடி ஆழமுள்ள பாதாள கிணற்றை சுற்றி சாகித்யா நடனமாடுவது போன்ற காட்சியை இயக்குனர் என் சுந்தரேஸ்வரன் இயக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராதவண்ணம் கால் இடறி சாகித்யா கிணற்றுக்குள் விழுந்தார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இணை இயக்குனர் பாலன் அடுத்த நொடியே கிணற்றுக்குள் குதித்து சாகித்யாவை பத்திரமாக மீட்டார்.
அதிர்ஷ்டவாசமாக காயமின்றி உயிர்பிழைத்த சாகித்யா கிணற்றுக்குள் விழுந்த அதிர்ச்சியில் மயங்கியிருந்தார். இதனால் மருந்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவத்தையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மறுநாள் வேறொரு இடத்தில் நடந்தது.
ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்பார்கள். 'தோழா' யூனிட் ஆழம் தெரிந்தே ரிஸ்க் எடுத்துள்ளது.
|