---Artistgallery2---
ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை 99 சதவீத படங்களில் ஆபாச காட்சிகளே அரங்கேறுகின்றன. இதுகுறித்து 'ராமன் தேடிய சீதை' படப்பிடிப்பில் இருந்த சேரனிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:
தற்போது ஆடை குறைப்பு கலாசாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. சினிமாவால்தான் மக்களிடம் இந்த மாற்றம் ஏற்படுகிறது என கூறி விட முடியாது. மற்ற பல்வேறு ஊடகங்களும் இதற்கு ஒரு காரணம்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆபாச காட்சிகள் இல்லாத படங்களே எடுக்கப்பட்டன். அந்த படங்கள் நீண்ட நாட்கள் ஓடியுள்ளன. ஆனால் தற்போது சினிமாவில் ஆபாச காட்சிக்கென்று தனி இடம் உள்ளது.
ஆபாச காட்சிகள் உள்ள படம் வெற்றி பெறும், அதை ரசிகர்கள் விரும்புவார்கள் என சில இயக்குனர்கள் நினைக்கிறார்கள். அது அவர்கள் செய்யும் தவறு. ஆபாச காட்சிகள் உள்ள படங்களை குடும்பத்துடன் சென்று பார்க்க யாரும் விரும்புவதில்லை. எனவே எனது படங்களில் ஆபாச காட்சிகள் வைப்பதில்லை.
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும். ஊனமுற்றவர்கள் வாழ்க்கையில் சோர்ந்துவிடாமல் வெற்றியடைய வேண்டும். இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
சினிமாவை நம்பி சென்னையில் மட்டும் 10 ஆயித்துக்கும் அதிகமான இளைஞர்கள் கனவுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு என்ன வழி? என்பது போன்ற நல்ல கருத்துக்களை சமுதாயத்துக்கு எடுத்து சொல்லியுள்ளேன். இந்த கருத்துக்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நல்ல பயனை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
|