---Artistgallery2---
ஆனால் நடிக்க வந்த சில ஆண்டுகள் கடந்தும் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று உறுதிமொழியை பத்திரமாக காத்து வருகிறார் கோபிகா. 'வெள்ளித்திரை' படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்துள்ளதாக ஒரு புரளி குண்டு வீசப்பட்டது.
அதுபற்றி அவரிடமே கேட்டோம்...
'வெள்ளித்திரை' படத்திற்கு இன்னும் ஒரு பாடல் காட்சிதான் படமாக்க வேண்டி உள்ளது. முதலில் வெளிநாடுகளுக்கு சென்று படமாக்க திட்டமிட்டார்கள். அங்கு பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இப்போது மூணாறில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். நடிகையாகவே இதில் நடிக்கிறேன். இப்படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறீர்களா என்று கேட்கிறார்கள். இதுவரை எந்த படத்திலும் கவர்ச்சியாக நடிக்கவில்லை. நடிகை வேடம் என்பதால் கவர்ச்சி காட்ட வேண்டும் என யார் சொன்னது? நான் நிஜத்திலும் நடிகை. ஆனால் எந்த படத்திலும் கவர்ச்சி காட்டவில்லை.
அதே போலத்தான் 'வெள்ளித்திரை' யிலும் நடித்திருக்கிறேன். நடிகை என்றாலே கவர்ச்சிதான் என்ற மாயையிலிருந்து ரசிகர்களை வெளியே கொண்டுவர வேண்டும். 'வெள்ளித்திரை'யில் அமைந்துள்ள என் வேடம் அதற்கு உதவும்.
'மலபார் வெட்டிங்' என்ற மலையாள படத்தில் நடிக்கிறேன். ப்ருத்விராஜின் அண்ணன் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த பெண், கேரளாவை சேர்ந்தவரை மணப்பது போல கதை அமைந்துள்ளது. விருதுக்காகவே தயாராகும் 'காவியம்' என்ற படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறேன். அதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
|