மீராஜாஸ்மின் மாண்டலின் ஸ்ரீனிவாசனின் சகோதரர் ராஜேஷை காதலிக்கிறார் என பத்திரிகைகள் ஸ்டெப் நியூஸ் வெளியிட்ட போதெல்லாம், காதலாவது கத்திரிக்காயாவது என எஸ்கேப்பான மீரா ஜாஸ்மின், விரைவில் ராஜேஷின் திருமதி ஆகப்போவதாக அவரே அறிவிதிதருக்கிறார்.
வாழ்க்கையில் பட்ட கஷ்டமெல்லாம் ராஜேஷ் உடன் இணைந்த பிறகு காணாமல் போய்விட்டது, அவரது நிழலில் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். விரைவில் திருமதியாகி அவரது பெயரை தன் பெயருடன் சேர்த்துக் கொள்வதை நினைத்தால் புல்லரிக்கிறது என்றெல்லாம் பரவசப் பட்டிருக்கிறார்.
இவ்வளவு நாள் இந்த புல்லரிப்பை ஏன் அடக்கிக் கொண்டிருந்தார் என்பதை பற்றியெல்லாம் வாய் திறக்கவில்லை மீரா. இதுவரை, பத்தரிகைகளில் பொய் சொல்கின்றன என 'பொய்' சொன்னதற்கும் விளக்கம் இல்லை.
விரைவில் மாண்டலின் ராஜேஷூடன் திருமணம் இருக்கும் என தெரிவித்திருக்கிறார் மீரா. திருமதி ஆனப்பிறகு தொடர்ந்து நடிப்பாரா என்பது அவரது ரசிகர்களின் மிகப் பெரிய கேள்வி.
கல்யாண புல்லரிப்பில் இருப்பவர் இதற்கும் பதிலொன்றும் இதுவரை சொல்லவில்லை!
|