சிக்கல்தான்... ஆனால், தேவயானிக்கல்ல. ஆறரைகோடி தமிழர்களுக்கு!
தானுண்டு தனது இயக்குனர் வேலையுண்டு என இருந்த சுந்தர் சி.யை உசுப்பேத்தி ஹீரோவாக்கினார் குஷ்பு. அவரும் தலைநகரில் தொடங்கி வீராப்பு, பெருமாள் என பைட்டும் வாயில் பன்ச் டயலாக்குமாக சோதித்துக் கொண்டிருக்கிறார்.
இதே வழியில் இப்போது தேவயானியும் தனது கணவர் ராஜகுமாரனை ஹீரோவாக்குகிறார். ராஜகுமாரன் விக்ரமனிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தபோது, சில துக்கடா வேடங்களில் கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார்.
இனி வரும் காலங்களில் சுந்தர் சி. போல பன்ச் டயலாக்குகளுடன் வலம் வரப் போகிறார் ராஜகுமாரன். அதற்கு வெள்ளோட்டமாக வருகிறது 'திருமதி தமிழ்' என்ற படம். இதில் ராஜகுமாரன்தான் ஹீரோ. இவருக்கு ஜோடியாக நடிப்பவர் கீர்த்தி சாவ்லா.
படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே ராஜகுமாரன்தான். தமிழ் ரசிகர்கள் நிலைமை திண்டாட்டம்தான்!
|