ஸ்ரீனிவாசன் திரைக்கதை எழுதி இயக்கி தேசியவிருது கிடைத்த படம் 'சிந்தா நிஷ்டயாய சியாமளா'. இந்தப் படத்தைதான் 'சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி' என தமிழில் சொதப்பி எடுத்தார் தங்கர்பச்சான்.
அப்பாசாமியின் ஒரிஜினல் ஸ்ரீனிவாசனுடையது என்பதை தங்கர்பச்சான் இறுதிவரை வெளிப்படுத்தவில்லை. நேரடியாக நாம் படத்தின் ரீ-மேக் ரைட்ஸ் கேட்டால் அதிகம் பணம் கேட்பார் என தனது உதவி இயக்குனரை அனுப்பி, அவருக்கு (உதவி இயக்குனருக்கு) படம் பண்ண படத்தின் ரைட்ஸை கேட்பதுபோல சொர்ப்ப ஆயிரங்களுக்கு ரைட்ஸ் வாங்கி, தங்கர் அதனை பயனபடுத்திக் கொண்டார். ரைட்ஸில் ஏமாற்றியதோடு, படத்தின் ஒரிஜினல் கதை ஸ்ரீனிவாசனுடையது என்பதை கூறாமல் மறைத்தார்.
ஸ்ரீனிவாசனின் 'கதபறையும் போள்' தற்போது 'குசேலனா'க ரஜினி நடிப்பில் தயாராக உள்ளது. ஸ்ரீனிவாசனை தமிழக ஊடகங்கள் வளைத்து வளைத்து பேட்டி கண்டு எழுதுகின்றன. எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் காலம் தாழ்த்தியாவது கிடைத்ததே என்ற நியாயமான மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்ரீனிவாசன்.
'கதபறயும் போள்' படத்தில் வறியவராக இருப்பினும் தனது நண்பரான நடிகர் மம்முட்டியிடம் உதவி என்று கேட்பதை முற்றிலும் தவிர்க்கும் தன்மான கேரக்டரில் ஸ்ரீனிவாசன் நடித்திருந்தார். இதற்கு மாறாக, கிருஷ்ணனிடம் உதவி கேட்டுச் சென்ற குசேலரின் பெயரை தழிழ் ரீ-மேக்கிற்கு வைத்திருக்கிறார்கள். இது சரியில்லையே என பி.வாசுவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் ஸ்ரீனிவாசன்.
நியாயமான கேள்வி என்பதால் படத்தின் பெயர் அனேகமாக மாறலாம்!
|