'பில்லா'வுக்கு முன் விஷ்ணுவர்தன் பிளான் செய்திருந்த 'சர்வம்' இன்னும் டேக் ஆஃப் ஆகமலே இருக்கிறது. சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டு திடீரென 'வாரணம் ஆயிரம்' படத்துக்குப் போனதால், விஷ்ணுவர்தனும் அஜித்தை வைத்து 'பில்லா'வை முடித்தார்.
அடுத்து 'சர்வம்'தான் என்று முடிவு செய்து வேலைகளும் தொடங்கிவிட்டன. ஹீரோ ஆர்யா. படத்தில் ஆர்யாவுக்கு இணையான நெகட்டிவ் கேரக்டர் ஒன்று வருகிறது. இதில்தான் பிரச்சனை.
முதலில் இந்த எதிர் நாயகன் வேடத்துக்கு அர்ஜூனை கேட்டு, நான் நல்லவனாக மட்டுமே நடிப்பேன் என அவர் மறுத்ததால், மோகன்லாலிடம் கதை சொல்லப்பட்டது. ரஜினிக்கே வில்லனாக நடிக்க மறுத்தவர்... இதற்கும் ஒத்துக்கொள்ளவில்லை.
இறுதியாக எதிர்நாயகன் வாய்ப்பு நானா படேகருககு சென்றுள்ளது. படேகருக்கு கதை சொல்ல விஷ்ணுவர்தன் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருப்பதாக அவரது அலுவலக வட்டாராம் சொல்கிறது.
படேகர் தமிழில் முதன் முதலாக நடித்த 'பொம்மலாட்டம்' இன்னும் வெளியாகாத நிலையில் 'சர்வம்' படத்தில் நடிக்க நானா ஒத்துக்கொள்வாரா
விஷ்ணுவர்தனின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து இருக்கிறது.
|