இவருடன் நடிக்கும் எந்த பெரிய நடிகரும் பிறகு இவருடன் இணைந்து நடிக்க விரும்பமாட்டார்கள். உதாரணம் கமல். 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜூக்கு காத்திருந்து கடுப்பானவர் கமல்.
பிரகாஷ்ராஜின் இந்த சொதப்பலால் ஒருபடம் ஐந்து மாதங்கள் தாமதாமாகியிருக்கிறது.
பிரியதர்ஷன் தமிழில் முதல் முறையாக தயாரிக்கும் படத்தை விஜய் ('கிரீடம்' இயக்குனர்) இயக்குகிறார். இதில் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒத்துக் கொண்டார். மொத்தம் ஆறுநாள் கால்ஷீட்.
ஆனால் அந்த ஆறுநாள் நடித்துக் கொடுக்காமல் ஆறுமாதம் இழுத்தடித்துவிட்டார். வெறுத்துப்போன பிரியதர்ஷன் பிரகாஷ்ராஜை தூக்கிவிட்டு அந்த வேடத்தில் நாசரை ஒப்பந்தம் செய்துள்ளார்.
பிரகாஷ்ராஜின் டார்ச்சர் ஆன் ஸ்கிரினுடன் முடிவது இல்லைபோல.
|