சமபலமுள்ள கதாநாயகிகளாக வளர்ந்துள்ள நயன்தாரா - த்ரிஷா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் கனவுக்கன்னிகளாக திகழ்கிறார்கள் இருவரும். ஆரம்பத்தில் நண்பிகளாக காட்டிக்கொண்ட இருவரிடமும் இப்போது மறைமுக போர் நடந்து வருகிறது.
'போக்கிரி' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருந்தவர் நயன்தாராதான். விஜய்யின் பேவரிட் ஜோடி த்ரிஷா என்றாலும் அஜித் பற்றி திர்ஷா வாசித்த புகழுரைகள் விஜய்யை சங்கடப்படுத்தி இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது.
த்ரிஷாவின் பிறந்தநாளுக்குகூட செல்லாமல் தவிர்த்த விஜய், 'போக்கிரி' படம் ஆரம்பிக்கும் முன் நயன்தாராவை சிபாரிசு செய்துள்ளார். நொந்துபோன த்ரிஷா விஜய்யை சந்தித்து நூற்றுக்கணக்கான 'ஸாரி'களை உதிர்த்து கண்ணீர் சிந்தியபின் இளையதளபதியின் கோபம் தணிந்து நயனுக்கு பதில் த்ரிஷாவை நடிக்கவைத்தார்.
'குருவி' படத்திலும் முதலில் நயன்தாராதான் நடிப்பதாக இருந்தது. ஆனால், இப்போதும் த்ரிஷாவின் 'அரசியல்' வேலை செய்ய மறுபடியும் நயன் இடத்தை பிடித்தார் த்ரிஷா. தெலுங்கிலும் ஒருவர் வாய்ப்பை ஒருவர் தட்டிப்பறித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூதரக தான் நியமிக்கப்பட்டு பின் நீக்கப்பட்ட விவகாரத்திலும் த்ரிஷாவின் சூழ்ச்சி இருக்குமோ என சந்தேகிக்கிறாராம் நயன்தாரா.
ஆக இருவருக்குள்ளும் நிகழ்ந்துவரும் இந்த போட்டா போட்டியின் முடிவில் என்ன நடக்கப்போகிறதோ என கவலை கொள்கின்றனர் இரு கனவுக்கன்னிகளின் ரசிகர்கள்.
|