தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம்போல தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கமும் பலம் வாய்ந்த சங்கமாக செயல்பட்டுவருகிறது. தயாரிப்பாளர்கள் - இயக்குனர்கள், நடிகர்கள்- இயக்குனர்கள் இடையே நடக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் இயக்குனர்கள் சங்கம் மூலம் தீர்வு காணப்படுகிறது.
சுமார் 800 உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கத்தில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனியில் இயங்கிவரும் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தவர் பாரதிராஜா.
இதனையடுத்து S.A.சந்திரசேகர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக S.A.சந்திரசேகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவராக பணியாற்றி வந்தார்.
இச்சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்படி அடுத்த இரண்டாண்டு காலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு வரும் 12-ந் தேதி நடைபெறவுள்ளது.
இம்முறை S.A.சந்திரசேகர் போட்டியிலிருந்து விலகிக்கொண்டு புதிய தலைமைக்கு வழி வகுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி புதிய தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. துணைத்தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரி்கிறது.
இயக்குனர் இமயத்திற்கு இப்போதே வாழ்த்து சொல்கிறது 'சினிசவுத்'
|