உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள 'குருவி' படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது லண்டன் கருணாஸின் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம். அதற்கு முன்பாக தனது கம்பெனிக்கு நடித்துக் கொடுக்கும்படி உதயநிதி கேட்டுக்கொண்டதால் லண்டன் கருணாஸூக்கு தந்த கால்ஷீட்டை உதயநிதிக்கு கொடுத்தார் விஜய்.
இப்போது 'குருவி' படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு காத்திருப்பதால் லண்டன் கருணாசுக்கு கால்ஷீட்டுக்களை ஒதுக்கியுள்ளார் விஜய். பிரபுதேவா இயக்கவுள்ள இப்படத்திற்கு 'சிங்கம்' என பெயரிடப்பட்டுள்ளது.
'போக்கிரி', 'குருவி' படங்களில் நயன்தாராவுக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு போனதால் இம்முறை நயன்தாராவுக்கு தனக்கு ஜோடி சேரும் வாய்ப்பை அளித்துள்ளார் விஜய்.
விஜய்யின் கமர்ஷியல் பார்முலாதான் 'சிங்கம்' படத்தின் கதையாம். இந்தப் படம் முடிந்ததும் ஏவி.எம்.நிறுவனம் சார்பில் எம்.பாலசுப்ரமணியம் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் விஜய் மீண்டும் உதயநிதிக்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளராம்.
ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த படத்திற்கு 'புலி' என பெயர் வைத்து பின்னர் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|