Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

"ஒரு தடவை ஜெயிச்சா..." - விஜயகாந்தின் பன்ச் டயலாக்
- 28.07.2007

By JBR
உற்சாகமாக இருக்கிறார் இயக்குனர் மாதேஷ். விஜயகாந்தை வைத்து படம் இயக்குவது இவரது நீண்டநாள் கனவாம். 'வித்தகன்' படம் அந்த கனவை நனவாக்கியிருக்கிறது.

Vijayakanth

"கேப்டனை வைத்து படம் இயக்குவதற்காக ஐந்து வருடங்களுக்கு முன் அவரிடம் கதை சொன்னேன். அப்போது கேப்டன் வேறு படங்களில் பிஸியாக இருந்தார். காலமும் நேரமும் இப்போதுதான் கூடி வந்திருக்கிறது" என்று கூறும் மாதேஷுக்கு ஐந்து வருடங்கள் காத்திருந்ததுக்கான வருத்தம் துளியில்லை. "'வித்தகன்' கேப்டனின் 150-வது படம். காத்திருந்ததால் எனக்கு கிடைத்த கவுரவம் இது" என்று அதற்கு காரணமும் கூறினார்.

படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஜயகாந்த். காக்கி சட்டை கேரக்டரை விஜயகாந்தை வைத்து வெவ்வேறு இயக்குனர்கள் சக்கையாக சாறு பிழிந்த பிறகும் போலீஸ் வேடமா?

"ஆனால், இந்த கேரக்டர் இதுவரை கேப்டன் நடித்த எல்லா போலீஸ் வேடத்திலிருந்தும் வித்தியாசப்பட்டிருக்கும்" என்று உறுதியாக கூறினார் மாதேஷ்.

Vijayakanth

கனடா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் 'வித்தகன்' படப்பிடிப்பு நடைபெறுகிறது. அடுத்தமாதம் முழுக்க வெளிநாடுகளில்தான் இருக்கப் போகிறது இப்பட யூனிட். படத்தில் விஜயகாந்துக்கு பன்ச் வசனங்களுக்கு பஞ்சமில்லையாம். அதிலும் ஹைலைட் பன்ச் டயலாக் ஒன்று உள்ளது. அதை வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு உச்சரிப்பில் விஜயகாந்த் சொல்லும்போது தியேட்டர் பிச்சுக்கும் என்றார் மாதேஷ். அந்த வசனம்,

"ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது. ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும்."







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
பொக்கிஷம்
சிவகிரி
அழகர் மலை
கோப்புகள்
முன்னோட்டம்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us