இதையடுத்து மீண்டும் விஜய் வைத்து படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பிரபுதேவா.
'அழகிய தமிழ்மகன்' படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து தரணி இயக்கத்தில் நடிக்கிறார். தயாரிப்பு, உள்ளாட்சிதுறை அமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி. விஜய்க்கு ஜோடி த்ரிஷா.
இந்தப் படத்தை தொடர்ந்து லண்டன் கருணாசின் ஐங்கரன் பிலிம்ஸுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய். படத்தை இயக்குவது யார் என்பது இதுவரை முடிவாகாமல் இருந்தது. பிரபுதேவா இந்தப் படத்தை இயக்குவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கதை இன்னும் முடிவாகவில்லை.
இந்நிலையில், தொடர்ந்து தெலுங்கில் ஹிட் கொடுத்து வரும் லாரன்ஸின் 'டான்' படத்தின் மீதும் ஒரு கண் வைத்துள்ளார் விஜய். லாரன்ஸ் இயக்க நாகார்ஜுன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் ஆந்திராவில் வெற்றி பெற்றால், அதன் தமிழ் ரீ-மேக்கில் நடிக்க விஜய் தீர்மானித்துள்ளதாக கூறுகின்றனர். இந்தப் படத்தில் நாகார்ஜுன் தம்பியாக லாரன்ஸ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐங்கரன் பிலிம்ஸின் புதிய தயாரிப்பில் விஜய்யை வைத்து இயக்க போவது ஒரு முன்னாள் டான்ஸ் மாஸ்டர்தான். அவர் பிரபுதேவாவா அல்லது லாரன்ஸா என்பதே இப்போதைய கேள்வி!
|