ரஜினி காரில் தனுஷின் சவாரி
- 28.07.2007
By Amalan
ஓட்டை காலனாவோ, ஓட்டை காரோ ரஜினி பயன்படுத்தியது என்றால் அதன் மதிப்பே தனிதான். எப்போதோ ரஜினி ஓட்டிய பழைய காரில் தனுஷ் சவாரி செய்துள்ளார்.
|
|
|
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த வெற்றி மாறன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'பொல்லாதவன்.' தனுஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கெளரிமுன்ஜல் நடிக்கிறார்.
தொடர்ந்து தனது படங்களில் ரீ-மிக்ஸ் பாடல்களுக்கு நடனமாடும் தனுஷ் இந்த படத்திலும் தனது மாமனார் ரஜினி பாடி நடித்த 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் இடம்பெறும் 'எங்கேயும் எப்போதும்....' பாடலுக்கு நடனமாடுகிறார்.
இந்த பாடல்காட்சிக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் வித்தியாசமான ஏழு செட்டுகள் போடப்பட்டு படமாக்கப்பட்டது. பழைய பாடலை பாடிய S. P. பாலசுப்ரமணியனே ரீமிக்ஸ் பாடலையும் பாடியுள்ளார்.
படத்தில் இன்னொரு சிறப்பம்சமும் இருக்கிறது. 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் ரஜினி பயன்படுத்திய அதே காரையே இந்த படத்திலும் தனுஷ் பயன்படுத்தியிருக்கிறார்.
|