ஷங்கர் இயக்கத்தில் ஷாரூக்: அதிகாரபூர்வ அறிவிப்பு
- 28.07.2007
By Amalan
ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் அலுவலகத்தில் மீண்டும் பரபரப்பு தீ பற்றிக்கொண்டுள்ளது. காரணம் அடுத்த பிரம்மாண்டத்திற்காக தயாராகிவிட்டார்.
|
|
|
'சிவாஜி'க்கு பிறகு ஹாயாக வெளிநாடு சென்ற ஷங்கர், உழைத்த மூளைக்கு ஓய்வுகொடுத்துவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். அடுத்து இவர் இயக்கபோகும் படம் எது? ஹீரோ யாரென்ற கேள்விகள் கோடம்பாக்கத்தில் கோரஸாக கேட்க தொடங்கியது. எல்லாவற்றுக்கும் இப்போது விடை தெரிந்துவிட்டது.
ஷங்கரின் அடுத்த குறி பாலிவுட்தான். இந்தியில் 'ரோபாட்' படத்தை இயக்கப்போகிறார். கதாநாயகன் ஷாரூக்கான். 'முதல்வன்' படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கபோகும் இரண்டாவது படம் இதுதான். இத்தகவலை ஷங்கரின் அலுவலகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
வடநாட்டு ரசிகர்கள் பெறப்போகும் இன்பத்தை நாமும் பெறவேண்டாமா? தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் 'ரோபாட்' டை வெளியிட திட்டமிட்டுள்ளது பட தயாரிப்பு நிறுவனம். தயாரிப்பது யார்னு சொல்லலையே... ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் என்ற பட நிறுவனம்தான் 'ரோபாட்'டுக்கு கோடிகளை கொட்டப்போகிறது.
|