---Artistgallery2---
வெற்றி படமோ, தோல்வி படமோ அஜித் நடிக்கும் படம் என்றால் பத்து நாள் ஓபனிங் கலெக்ஷ்னுக்கு கியாரண்டி நிச்சயம். இதனாலேயே அஜித்தின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் கம்பெனிகள் நிறைய.
'பில்லா'விற்கு பிறகு ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார் அஜித். இப்படத்தை ராஜூசுந்தரம் இயக்குகிறார். பொங்கலுக்கு பிறகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து சிவாஜி புரொடக்ஷ்னுக்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார் அஜித். கௌதம்மேனன் இதனை இயக்குகிறார். 'பில்லா' படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்த பிரபுவுக்கு அஜித்தின் செயல்பாடுகளும், நற்குணங்களும் கவர்ந்துவிட்டதாம். எனவே, தங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவேண்டும் என்று அஜித்திடம் பிரபு வேண்டுகோள் வைக்க, அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டாராம் அஜித்.
'வாரணமாயிரம்' படப்பிடிப்பு முடிந்ததும் அஜித்தின் படத்தை இயக்கவுள்ளாராம் கௌதம்மேனன். இந்த படத்திற்கு 'கனவுகள் கற்பனைகள்' அல்லது 'வானம் கடந்த சிறகுகள்' என்று பெயரிடப்படலாம் என கூறப்படுகிறது.
|