இவரது புதிய படத்தின் பெயர் 'அங்காடித்தெரு'. சுத்தமான தமிழில் பெயர் வைத்திருக்கும் பாலனுக்கு முதலில் பாராட்டுக்கள்.
'அங்காடித்தெரு' வின் கதை என்ன என்பது தெரியவில்லையென்றாலும், வசந்தபாலன் கதையை மட்டுமே நம்பி களம் இறங்கியிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். காரணம், படத்தின் ஹீரோ ஒரு புதுமுகம்!
'வெயில்' படத்திலாவது பரத், பசுபதி, பாவனா என தெரிந்த முகங்கள் நிறைய இருந்தன. இதில் நாயகனாக வருவது மோகன் என்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர். கால்பந்தாட்ட வீரரான மோகனுக்கு 'அங்காடித்தெரு' முதல்படம். படத்தில் இவருக்கு ஜோடி அஞ்சலி. 'கற்றது தமிழ்' கதாநாயகி. ஒரேபடத்தில் மட்டுமே நடித்திருக்கும் அஞ்சலியும் ஏறக்குறைய புதுமுகம்தான்.
வர்த்தககடைகள் மிகுந்த பகுதியை அங்காடித்தெரு என்பார்கள். வசந்தபாலனும் தனது படத்துக்காக, கடைகள் நிறைந்த தி.நகர் ரங்கநாதன் தெருவை அப்படியே 'செட்'டாகப் போட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.
வெயிலை அனுபவித்தவர்களுக்கு இன்னொரு வித்தியாசமான அனுபவமாக 'அங்காடித்தெரு' இருக்கும் என்பதை படம் குறித்து வரும் தகவல்களிலிருந்தே அறிய முடிகிறது.
|