Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

நடிகர் கார் மீது கல்வீச்சு!
- 29.01.2008

By JBR
நடிகரும் இயக்குனருமான டாக்டர் ராஜசேகர் கார்மீது கல்வீசி தாக்கி அவரை காயப்படுத்தியிருக்கிறார்கள் நடிகர் சிரஞ்சீவியின் ரசிகர்கள்.

Chiranjeevi

நேற்றுமுன்தினம் ராஜசேகர் தனது மனைவி ஜீவிதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோயில் திருவிழா ஒன்றில் கலந்து கொண்டார். நிகழிச்சி முடிந்தபின் நிருபர்களின் கேள்விகளுக்கு ராஜசேகர் பதிலளித்தார்.

சிரஞ்சீவி அரசியலுக்கு வருவது பற்றி கேட்டதற்கு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றவர், "சிரஞ்சீவி இதுபற்றி எதுவும் கூறவில்லை. மீடியாக்கள் தான் தேவையில்லாமல் பெரிதுபடுத்துகின்றன" என்றார்.

ராஜசேகர் இப்படி ஒளிவுமறைவின்றி பேசிய பிறகும் நிருபர்கள் விடவில்லை. சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தால் ஆதரவு அளிப்பீர்களா என்று மேலும் கேட்டனர். ராஜசேகர் ஆம், இல்லை என்று பதிலளித்திருக்கலாம். அதைவிடுத்து, "சிரஞ்சீவிக்கு அரசியல் அனுபவம் இல்லை" என உண்மையைப்பேச, அது சிரஞ்சீவியின் ரசிகர்களை உசுப்பி விட்டது.

தனியார் சேனல்கள் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் ராஜசேகரின் 'உண்மை' பேச்சை திரும்பத்திரும்ப ஒளிபரப்பி சிரஞ்சீவியின் ரசிகர்களை கொம்பு சீவி விட்டன.

Dr.Rajasekar

நேற்று காலை செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து ஹைதராபாத்திலுள்ள தனது வீட்டிற்கு மனைவி குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த ராஜசேகரின் காரை சிரஞ்சீவியின் ரசிகர்கள் வழிமறித்து சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்து ராஜசேகரின் தோள், முகம் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. அவரது குழந்தைகளுக்கும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த அசம்பாவிதத்தை தொடர்ந்து ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் ராஜசேகரும், அவரது மகளும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதற்குப் பிறகும் ஆத்திரம் அடங்காத சிரஞ்சீவியின் ரசிகர்கள் ராஜசேகரின் உருவபொம்மையை அங்கங்கே எரித்து போராட்டம் நடத்தினர்.

இந்த சம்பவங்களை தொலைக்காட்சியில் பார்த்த சிரஞ்சீவி ராஜசேகர் வீட்டிற்குச் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டார். இருவரும் கூட்டாக பேட்டி அளித்ததைத் தொடர்ந்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us