புகையிலைக்கு எதிராக அன்புமணி நீண்டதொரு போராட்டமே நடத்தி வருகிறார். நடிகர்கள் சினிமாவில் புகைப்பதை நிறுத்தினாலே புகையிலையின் பாதிப்பு பாதியாக குறைந்து விடும் என்பது இவரது கண்டுபிடிப்பு.
ரஜினி சினிமாவில் சிகரெட் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று கடைசி இரு படங்களிலும் சிகரெட் புகைப்பதை தவிர்த்தார். அதேபோல் விஜய்யும் இனி சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளார்.
தமிழ்கத்தில் கிடைத்த வெற்றியால் இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் ஆகியோருக்கும் இதே கோரிக்கையை விடுத்தார் அன்புமணி.
ஷாருக்கானுக்கு சிகரெட் ஆறாவது விரல்போல. தவிர, பெப்ஸியை இந்தியாவில் தடைசெய்தால் அமெரிக்கா சென்று அங்கு குடிப்பேன் என்று சொன்னவர். அவர் அமைச்சரின் கோரிக்கையை ஏற்பாரா?
"அமைச்சர் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் சினிமாவில் புகைப்பது படைப்பாளிகளின் உரிமை" என்று ஒரே போடாக போட்டு அன்புமணியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
படப்பெட்டியை கடத்திவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளூர் நடிகர்கள் கோரிக்கைக்கு உடன்படலாம். அதே தோரணையை வெளியூர் நடிகர்களிடம் காட்டினால் எடுபடுமா?
|