வைகுண்டசாமி தவசு இருந்த சாமிதோப்பில் பிறந்ததால் 'அய்யாவழி' படத்தை இயக்கும் பாக்கியம் பெற்றேன் எனக் கூறும் இயக்குனர் பி.சி.அன்பழகன். திரைக்குப்பின் இருந்த கலைஞர்கள் பலரை திரையில் நடிக்க வைத்தது மட்டுமில்லாமல், இரண்டு இசைக் கலைஞர்களை திருமண பந்தத்தில் இணைத்துள்ளார்.
அய்யாவின் பக்தர்களான கதாநாயகன் - கதாநாயகி இருவரும் திருமணம் செய்து கொண்டு, கடற்கரையில் தேனிலவு கொண்டாடும் காட்சிக்காக புலமைப்பித்தன் எழுதிய பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.
"வானவெளி எங்கும்-இனி நாம் போவோம் வாழும்வரை அங்கே-இனி நாம் வாழ்வோம் இது காதல் தேவதையின் ராஜாங்கம் நம் காலில் வந்துவிழும் ஆகாயம் இரு கண்கள் பேசுவதும் சுகமாகும் உன் மௌனம் கூட ஒரு தவமாகும்
என் தேகம் தொட்டு இனி நீங்காதே... சுகம் தேடும் காலமிது உறங்காதே... உன் சிறகுகளாய் நானிருப்பேன் உன் உறவிருந்தால் உயிர்தரிப்பேன்... "
என்று தொடங்கும் பாடலை புதுப்பாடகி மலேசியா சாருமதி - இசையமைப்பாளர் பகவதி சிவனேசன் இருவரும் பாடினார்கள். கவித்துவமிக்க உணர்வுப்பூர்வமான இந்த காதல் பாடலை பாடிய இவர்களுக்குள் நிஜமாகவே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டுள்ளனராம்.
இதில் வைகுண்டசாமியாக ராஜா, கதாநாயகனாக சஞ்சய், கதாநாயகியாக சுஜிபாலா நடித்துள்ளனர்.
|