அவரது இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிக்கை வருமாறு :-
இந்தியாவில் உள்ள பாட்டில் குடிநீரை நான் பருக மறுத்ததாக ஒரு செய்தி என்னைக் கேவலமாக குற்றம் சாட்டியது. நான் வெளி நாட்டில் உள்ள குடிநீரை கொண்டு வந்ததாகவும், இந்திய உணவு பிடிக்காததால் எனக்கென்று சமையல் ஆளை அழைத்து வந்ததாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. நான் பல இந்திய சினிமா நட்சத்திரங்களுடன் பேசவில்லை என்றும் சில செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய கலாச்சாரம், சினிமாவை பெரிதும் மதிப்பவன் நான். எனக்கு இந்திய நடிகர்களின் பெயர் தெரியாவிட்டாலும், அவர்கள் ஒவ்வொருவர் பெயரையும் சரியாக உச்சரிக்க வராவிட்டாலும், அவர்களை நான் மதிக்கத் தவறியதே இல்லை. நான் இந்திய உணவை விரும்பி உண்பவன். சென்னையில் 2 முறை இந்திய உணவுகளை வாங்கி சாப்பிட்டேன் என்பது உண்மை.
என்னை குறை கூறி செய்தி வெளியிட்டவர்களிடம் நான் சில கேளிவிகளை கேட்க விரும்புகிறேன். நான் வெளிநாட்டில் இருந்து குடிநீர் கொண்டு வந்ததாகக் கூறினால், அது என்ன 'பிராண்ட்' தண்ணீர் என்று சொல்லமுடியுமா? அதை நான் தங்கி இருந்த ஓட்டல் பணியாளர்களிடம் கேட்டுப்பாருங்கள். எனது அறைக்கென்று ஓட்டல் நிர்வாகத்தினர் சிறப்பாக நியமித்து இருந்த 3 'பட்லர்'களிடம், நான் என்ன சாப்பிட்டேன் என்று நீங்கள் கேட்டதுண்டா? நான் யாரையும் சந்திக்க விரும்பாமல் அறையிலேயே தங்கி இருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளனர். நான் எனது அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காகவா இந்தியாவுக்கு வந்தேன்?
நான் பல ஆண்டுகளாக மக்கள் பார்வையில் இருப்பவன். கீழான விமர்சனங்களால் பேசப்பட்டவன், நான் யாரிடமும் கோபப்பட்டு பேசுவது மிகவும் அபூர்வம். ஆனால், இந்தப் பொறுப்பற்ற வதந்திகளால் எனது பயணத்தின் நல்லெண்ணங்கள் பாழாகிப் போய்விட்டன. என்னை விருந்தினராக அழைக்கக்கூடிய அன்புள்ளோர் அனைவரும் இந்த செய்தியைப் பார்த்தால், என்னைப் பற்றிய முற்றிலும் தவறான எண்ணம் அவர்களுக்கு வந்து விடுமோ? என்று மிகவும் அச்சப்படுகிறேன். எனவே தான் எனது அறிக்கையை இணைய தளம் மூலமாக உடனடியாக வெளியிட்டேன்.
இவ்வாறு ஜாக்கிசான் கூறியுள்ளார்.
|