ஸ்ரீலஷ்மி புரொடெக்ஷ்ன்ஸ் சார்பில் T.ராமாராவ் வழங்க டி.அஜய்குமார் தயாரித்த படம் 'மலைக்கோட்டை'. 'திருவிளையாடல்' படத்தை தொடர்ந்து ஜி.பூபதிபாண்டியன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக விஷால், கதாநாயகியாக ப்ரியாமணி நடித்திருந்தனர்.
படம் வெளிவந்த ஒரு வாரம் நல்ல கலெக்ஷ்னை பார்த்த தியேட்டர்கள் திடீரென காற்றுவாங்கி பத்து நாட்களுக்கு பிறகு மீண்டும் பிக்அப் ஆகி ஓடியது. இப்படி கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்த இப்படத்தின் வெற்றி இப்போது உறுதியாகிவிட்டது.
125 நாட்களை கடந்துள்ள 'மலைக்கோட்டை' படத்தின் வெற்றிவிழா வரும் 1-ந் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடக்கவுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம நாராயணன் தலைமையில் நடக்கவுள்ள விழாவில் ஏவி.எம்.சரவணன், கேயார்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், பிரபு, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர்.
அப்போது படத்தின் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது.
|