தமிழ்த் திரையுலகில் நம்பர் ஒன் கதாநாயகிகளாக இருந்த சிம்ரன், ஜோதிகா, லைலா போன்ற நடிகைகள் கடைசிவரை டப்பிங் குரலில்தான் நடித்தனர். என்னதான் சிறந்த நடிகையாக பல விருதுகளை வென்றாலும் தேசிய விருது வாங்க வேண்டுமென்றால் சொந்தக்குரலில் பேசியிருந்தால் மட்டுமே முடியும்.
சொந்தக்குரலில் பேசி நடிப்பது என்பது தேசிய விருது உட்பட பலவற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சினேகா தமிழ் நடிகையாக இருந்தும் 'பிரிவோம் சந்திப்போம்' தவிர வேறு படங்களில் சொந்தக்குரலில் பேசி நடிக்கவில்லை.
இந்த லிஸ்டில் இதுவரை இரவல் குரலில் நடித்து வந்த ஷெரீன் 'பூவா தலையா' படத்தில் முதன்முறையாக டப்பிங் பேசுகிறாராம்.
சஞ்சய்ராம் இயக்கும் இப்படத்தில் ஷெரீனுக்கு ஆச்சர்யம் மிகுந்த பிரமாண பெண்வேடம். இதில் பிராமண பாஷை பேசி நடிக்கும் ஷெரீன் அதற்காக தனி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
|