நல்ல படம், நல்ல வசூல், சிறந்த இயக்கம், சிறந்த நடிப்பு என 'பருத்திவீரன்' பெற்ற பாராட்டுக்கள் ஏராளம். உச்சபச்சமாக பெர்லின் திரைப்பட விழாவில் அமீருக்கும் பருத்திவீரனுக்கும் கிடைத்த அங்கீகாரம் இந்திய - தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த விஷயம்.
இந்த வகையில் நல்ல கலைஞர்களையும் அவர்களது திறமைகளையும் ஊக்குவித்து பாராட்டுவதை கொள்கையாக கொண்டிருக்கும் சினிமா பிரஸ்கிளப் அமீருக்கு பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
மே 2-ந் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள பிலிம்சேம்பர் அரங்கில் மாலை 6 மணிக்கு விழா நடைபெறுகிறது.
இவ்விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு அமீருக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார். மேலும் இயக்குனர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திர சேகர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம.நாராயணன், பிலிம் சேம்பர் தலைவர் கேயார்ஜி, நடிகர் சங்க தலைவர் சரத்குமார், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் மற்றும் இய்ககுனர்கள் பாலுமகேந்திரா,அகத்தியன், சீமான், சேரன், லிங்குசாமி, கேயார் உள்ளி்ட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர்.
விழாவுக்கு சினிமா பிரஸ் கிளப் தலைவர் இரா.த.சக்திவேல் முன்னிலை வகிக்கிறார். கலைப்பூங்கா ராவணன் தலைமை தாங்குகிறார்.
சினிமா பிரஸ்கிளப்பின் முன்னாள் பொருளாளர் ஆதிராஜன் வரவேற்புரையாற்றுகிறார். பெர்லின் விருது அறிமுகவுரையை அமலன் வழங்குகிறார்.
நிகழ்ச்சியை நடிகர் கருணாஸ் தொகுத்து வழங்குகிறார்..
|