Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
கன்னடத்தில் 'சண்டைக்கோழி' : லிங்குசாமி கிர்ர்....
- 29.06.2009
By Amalan
எந்த நேரத்தில் 'சண்டக்கோழி' என பெயர்வைத்தனரோ, அந்த படம் திரைக்கு வந்ததிலிருந்து லிங்குசாமியும் விஷாலும் சண்டைக்கோழியாகிவிட்டனர்.
சொன்ன பட்ஜெட்டை தாண்டி லிங்குசாமி சண்டைக்கோழி பட்ஜெட்டை அதிகப்படுத்திவிட்டதாகவும், கணிசமான கமிஷன் அடித்துவிட்டதாகவும் படம் திரைக்கு வந்த புதிதில் லிங்குசாமி மீது விஷால் தரப்பு ஏக கடுப்பை அள்ளிகொட்டியது. அதன்பிறகு மறைமுக தாக்குதல்களால் தங்கள் மனஸ்தாபங்களை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டபோது எதிரே வந்த விஷாலை "என்னடா" என்று லிங்குசாமி ஒருமையில் அழைத்ததாகவும் கோபமடைந்த விஷால், "வாடா போடாங்கிற வேலையெல்லாம் வேணாம். மரியாதையா சார்னு கூப்பிடனும்" என்று பாய்ந்ததாக ஒரு தகவல் சொல்லப்பட்டது. எதிரும் புதிருமாக இருக்கும் இருதரப்பினரிடையே இன்னொரு புகைச்சல் கிளம்பியிருக்கிறது.
'சண்டைக்கோழி' படத்தை கன்னடத்தில் தயாரிக்கும் உரிமையை அர்ஜூனுக்கு வழங்கியுள்ளார் விஷால். 'வாயுபுத்ரா' என்னும் பெயரில் உருவான இப்படத்தில் அர்ஜூனின் சகோதரி மகன் சிரஞ்சீவி சார்ஜாநாயகனாக நடிக்கிறார். இதுபற்றி கேள்விப்பட்ட லிங்குசாமி உடனே தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வந்துவிட்டார். "நான் எழுதி இயக்கிய படத்தை எனக்கே தெரியாமல் விற்றது தவறு. எனவே விஷால் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என புகார் கொடுத்துள்ளார்.
|